பரிசுத் தொகையை திருப்பிக் கொடுத்த விஜய் சேதுபதி

பரிசுத் தொகையை திருப்பிக் கொடுத்த விஜய் சேதுபதி

1 mins read
d6ed660f-df02-4edf-bc99-2f4ddaa293d4
-

15வது அனைத்துலகத் திரைப்பட விழா டிசம்பர் 14ஆம் தேதி துவங்கி 21ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் 12 தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றிலிருந்து சிறந்த தமிழ்த் திரைப்படமாக சுரேஷ் சங்கையா இயக்கிய 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப் படம் தேர்வானது. இரண்டாவது சிறந்த தமிழ்த் திரைப்படமாக புஷ்கர் = காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடித்த 'விக்ரம் வேதா' தேர்வு பெற்றது. அந்தப் படத்திற்காக 'அமிதாப்பச்சன் யூத் ஐகான்' விருது நடிகர் விஜய்சேதுபதிக்கு வழங்கப்பட்டது. அந்த விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. அந்தத் தொகையைத் திரைப்பட விழாவை நடத்தும் 'இந்தோ சினி அப்ரியேஷன்ஸ்' அமைப்புக்கே வழங்கினார் விஜய்சேதுபதி.