விக்னேஷ் சிவன் இயக்கத்தில், 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்தார் நயன்தாரா. அப்போது முதல் அவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாகப் பங்கேற்று வருகின்றனர். கடந்த ஆண்டு அவர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று வந்தனர். அண்மையில் கிறிஸ்மஸ் தினத்தையொட்டி, 'செல்பி' படம் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இதில் நயன்தாரா அவருடன் நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறார். இந்தப் புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வைரலானது. நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் சென்னைப் புறநகரில் வாங்கி இருக்கும் பங்களாவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் பங்கேற்றார். இருந்தாலும் இருவரும் தங்கள் காதலைப் பற்றி வெளிப் படையாகப் பேசாமல் இருக் கின்றனர். தற்போது நயன்தாரா தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். தங்கள் காதல் விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசினால் அது தங்கள் இருவருடைய திரைத் தொழிலைப் பாதிக்கும் என்ப தால் அதுபற்றி நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் எங்குமே பேசுவதில்லை என்று நெருக்க மானவர்கள் கூறுகின்றனர்.

