லேசியாவில் எதிர்வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெற உள்ள நட்சத்திர கலை நிகழ்ச்சியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாக நடிகரும் இயக்குநருமான வாராகி தெரிவித்துள்ளார். விஷால் தலைமையிலான தென் னிந்திய நடிகர் சங்கத்தில் ஏற்கெனவே நடைபெற்ற ஊழல் தொடர்பாக தாம் தொடுத்திருக்கும் வழக்கின் விசா ரணை நிலுவையில் இருக்கும்போது, அதேபோன்ற மோசடிக்கு வித்திடும் மற்றொரு பிரமாண்ட நிகழ்ச்சி நடை பெறுவதை எப்படி அனுமதிக்க முடி யும்? என வாராகி கேள்வி எழுப்பியுள்ளார்.
"திரைக் கலைஞர்களின் ஆதரவில் இத்தகைய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவதாக அவர்கள் தரப்பில் காரணம் கூறப்படலாம். ஆனால் முந்தைய மோசடிகளுக்கு விளக்கம் அளிக்காத நிலையில், அதேபோல் மற்றொரு மோசடியை நிகழ்த்த அனுமதிக்க முடியாது," என்று நடிகர் வாராகி திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளார். இதனால் தமிழ்த் திரையுலகத்தினர் மத்தியில் தற்போது பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

