குடும்பம் சார்ந்த நுட்பமான அன்பையும் வலியையும் 'ஆண் தேவதை' படத்தின் மூலம் சொல்லி இருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர் தாமிரா. 'இரட்டைச்சுழி' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இவர், அடுத்து இயக்கும் படம் 'ஆண் தேவதை'. இதில் சமுத்திரகனி கதை நாயகனாகவும் ரம்யா பாண்டியன் கதை நாயகியாகவும் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்கள் கவின், மோனிகா இருவரும் அசத்தலாக நடித்துள்ளனராம். "உறவு என்பது உயிருடன் உள்ள நதியைப் போன்றது. அதில் எப்போதும் வெள்ளம் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். இக்கருத்தை படத்தில் ஆணித்தரமாக வலியுறுத்தி உள்ளேன்," என்கிறார் தாமிரா.
உறவின் முக்கியத்துவத்தைச் சொல்ல வருகிறது 'ஆண் தேவதை'
1 mins read
-

