பெண்களைப் போலவே பாலிவுட்டில் உள்ள ஆண் களும் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக பாலியல் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர் என்று தெரி வித்துள்ளார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.
இந்திப்பட உலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் பிரியங்கா சோப்ரா, தனது சினிமா அனுபவம் குறித்துப் பேசியுள்ளார். "ஒருவர் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் பெறுவதை நானும் என் அனுபவம் வழி அறிந்து வைத்துள்ளேன். "ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் பெற்று, அதன்பிறகு கடைசி நேரத்தில் அந்தத் திரைப் படத்தில் நடிக்கும் நடிகரின் காதலியோ அல்லது இயக்குநரின் காதலியோ திடீரென நடிகையாக ஒப் பந்தம் ஆகிவிடுவர். இதில் நானும் பலிகடா ஆகி இருக்கிறேன். இந்த காரணங்களால் என்னையும் படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
"அந்த சமயங்களில் எல்லாம் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. ஏனெனில் அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்குப் பணிந்துபோக நான் மறுத்துவிட்டேன். என்னை மதிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். பட வாய்ப்புக்காக நான் யாருடனும் எதற்காகவும் அனுசரித்துப் போகவில்லை.
"திரைத் துறையில் பெண்கள் மட்டுமல்ல; இப்போது ஆண் களும்கூட பட வாய்ப்புக்காக பாலியல் நெருக்கடிக்கு கட்டுப்பட்டு செல்கின்றனர். "நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் எப்போதும் ஆதரவாக இருக் கிறது. அதுதான் எனது மிகப்பெரிய பலம்.

