'காதல் கண் கட்டுதே' படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த அதுல்யா ரவி, அடுத்து 'சுட்டுப் பிடிக்க உத்தரவு' என்ற புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'கல்பதரு பிக்சர்ஸ்' சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் புதிய படத்தை 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். இதில் இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் முக்கிய வேடங்களை ஏற்க, விக்ராந்த் கதாநாயகனாக நடிக்க உள்ளார். "செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றும் விக்ராந்தும் சுசீந்திர னும் பணியில் இருக்கும்போது ஒரு குற்றச்சம்பவத்தைக் காண நேர்கிறது. இது குறித்து காவல்துறை அதிகாரியான மிஷ்கின் விசாரணை மேற்கொள்கிறார். இதில் எனக்கும் முக்கியமான கதாபாத்திரத்தை ஒதுக்கிய இயக்குநருக்கு நன்றி. திகில் நிறைந்த இப்படம் ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரும். என் நடிப்பில் அடுத்து 'ஏமாலி' படம் வெளியாகிறது. அதுவும் வெற்றி பெறும் என நம்புகிறேன்," என்கிறார் அதுல்யா ரவி.
வெற்றிக்காகக் காத்திருக்கும் அதுல்யா
1 mins read
-

