நந்திதா நடிப்பைப் பாராட்டும் இயக்குநர்

நந்திதா நடிப்பைப் பாராட்டும் இயக்குநர்

2 mins read
83c0c9a2-936f-4517-9752-95d087d6eca4
-

'அட்டகத்தி' தினேஷ், நந்திதா ஆகிய இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் 'உள்குத்து'. கணினி நிபுணரான கார்த்திக் ராஜு இப்படத்தை இயக்கி உள்ளார். இதுவரை படத்தைப் பார்த்தவர்களில் பெரும் பாலானோர் நல்ல படைப்பு என்றே பாராட்டுகி றார்களாம். இதனால் உற்சாகத்தில் மிதப்பவர் தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக் கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகச் சொல்கிறார். "இப்படத்துக்கும் முன்பே நானும் தினே‌ஷும் 'திருடன் போலிஸ்' படத்தில் இணைந்து பணியாற்றி இருப்பது அனைவருக்கும் தெரியும். அதில் பாலசரவணன் இருந்தார். 'உள்குத்து' படத்தில் முன்னணி கதாநாயகனை நடிக்க வைத்திருக்க லாமே என்று சிலர் கேட்கிறார்கள்.

"என்னைப் பொறுத்தவரை தினே‌ஷும் பாலசரவணனும் இக் கதைக்குப் பொருத்தமானவர்க ளாகத் தோன்றியதால் எந்தத் தயக்கமும் இன்றி அவர்களை ஒப்பந்தம் செய்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. "முன்பு 'திருடன் போலிஸ்' படம் பண்ணும்போதே நான், தினேஷ், பால சரவணன் ஆகிய மூவரும் மீண்டும் இணைந்து இன்னொரு படம் செய்வோம் என்று முடிவெடுத்தோம். கதை என்ன கேட்கிறதோ அதைக் கடுமையான உழைப்பின் மூலம் கொண்டு வரக்கூடியவர் தினேஷ். அவரைப் போன்ற நடிகன் கிடைத்தால் என்ன மாதிரியான கதையையும் கையில் எடுக்கலாம். இதுவரை நடித்த படங்களிலிருந்து மாறுபட்ட நடிப்பில் அசத்தியுள்ளார்.

" நந்திதா குறித்து? "

அவருக்கு அறிமுகம் தேவையில்லை. வழக்கம்போல் இந்தப் படத்திலும் இயல்பான தோற்றத்தில் தரமான நடிப்பை வழங்கி உள்ளார். சாதாரண துணிக்கடையில் வேலை செய்யும் பெண்ணாக நடித்துள்ளார். "ஏற்கெனவே நந்திதா, தினேஷ் இருவரும் 'அட்டகத்தி'யில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே நந்திதாவையே கதாநாயகியாக முடிவு செய்தோம். நடிப்பில் பின்னி எடுத்துவிட்டார். உடன் இருக்கும் வேலை செய்பவர்கள் கொஞ்சம் கவனம் சிதறினாலும் காலி," என்கிறார் கார்த்திக் ராஜு.