புத்தாண்டை முன்னிட்டு புதிய இசைத் தொகுப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார் சிம்பு. இதற்கு 'மரண மட்டை' என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் சிம்பு பல இசைத் தொகுப்புகளை உருவாக்கி இருப்பது தெரிந்த சங்கதி. அவற்றுக்கு இசையமைத்த துடன் பெரும்பாலும் அதில் தாமே பாடல்களையும் பாடி இருப்பார். இந்நிலையில் அவரது இந்தப் புதிய இசைத் தொகுப்பில் ஓவியா பாடியிருக்கிறார் என்பதே சிறப்பம்சம். சிம்புவின் இசைத்தொகுப்பில் ஓவியா இணைந்து பணியாற்றியது இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.
சிம்பு நடிகராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும் முத்திரை பதித்துள்ளார். இவரது இசையில் சந்தானம் நடிப்பில் வெளியான 'சக்க போடு போடு ராஜா' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இவரது இசைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்தே புதிய இசைத் தொகுப்பை வெளியிட்டுள்ளாராம்.

