ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள அன்பின் உதவியால், வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதைத் தான் உணர்ந்துள்ளதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். புத்தாண்டையொட்டி தன் கைப்பட எழுதிய அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். "அர்ப்பணிப்புடன் கடுமையான உழைப்பைச் செலுத்தி மற்ற விஷயங்களைக் கடவுளிடம் விட்டு விட வேண்டும் என்பதையும் நீங்கள் எனக்கு உணர்த்தி உள்ளீர்கள். அன்பினாலும் நேர்மறை விஷயங் களாலும் இந்த வருடம் அருமையாக அமைந்துள்ளது. உங்களால்தான் நான் இந்த இடத்தில் உள்ளேன். "உங்கள் இதயத்தில் எனக்கும் சிறிய இடம் அளித்ததற்கு மிக்க நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா. ரசிகர்களின் அன்புக்கு தாம் செய்யும் கைமாறாக இன்னும் கடு மையாக உழைத்து நல்ல படங்களை தரப்போவதாக அவர் மேலும் தெரி வித்துள்ளார்.
அன்பால் நெகிழ்ந்த நயன்தாரா
1 mins read
-

