மனக்கதவைத் திறக்க வரும் 'சாவி'

மனக்கதவைத் திறக்க வரும் 'சாவி'

1 mins read
03dcf00f-e601-48d9-8c4c-201aceea318e
-

'முத்துக்கு முத்தாக' படத்தில் அறிமுகமான பிரகாஷ் சந்திரா நாயகனாக நடித்துள்ள படம் 'சாவி'. அண்மையில் வெளியான 'அறம்' படத்தில் தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய சுனுலெட்சுமிதான் இப்படத்தின் நாயகி. "மதுரையில் வாழும் இளைஞன் ஒருவனுடைய வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்களுடன் கூடிய சம்பவங்களே 'சாவி' படத்தின் கதை. இந்தச் 'சாவி' உங்களுடைய இதயங்களையும் திறக்கக்கூடும்," என்கிறார் படத்தின் இயக்குநர் இரா.சுப்பிரமணியன். ராஜலிங்கம் வில்லனாக நடித்துள்ள 'சாவி'க்கு இயக்குநரே இசையும் அமைத்துள்ளார்.