சினிமாவில் அறிமுகமாகும் ஜூலி

சினிமாவில் அறிமுகமாகும் ஜூலி

1 mins read
38cd9960-7d8e-403a-900d-b7d2e4a00d14
-

'பிக்பாஸ்' புகழ் ஜூலி தமிழ்ச் சினிமா உலகில் நாயகியாக அடியெடுத்து வைக்க உள்ளார். இப்படத்தை 'கே-7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. 'ஜூலியும் 4 பேரும்', 'தப்பாட்டம்' போன்ற படங்களில் நடித்த துரை சுதாகர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், இயக்குநர், படத்தின் தலைப்பு, தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. "கதையைக் கேட்டதும் எனக்குப் பிடித்துவிட்டது. இப்படம் என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும். ஏனெனில் அந்தளவு எனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமாம்," என்று உற்சாகத் துள்ளலுடன் சொல்கிறார் ஜூலி.