சென்னை: கொள்கை வேறு, சினிமா வேறு என்பதை திமுக தொண்டர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளதாக சென்னை முன்னாள் மேயரும் திமுக எம்எல் ஏவுமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி புதுக்கட்சி தொடங்க இருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுக்கட்சிகளின் வருகை யால் தங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றார். "ரஜினி தனிக்கட்சி ஆரம் பிப்பதாக அறிவித்து இருப்பதன் மூலம் எங்கள் தொண்டர்கள் ரஜினி ரசிகர் மன்றங்களில் இருந்து வெளியேறுவார்கள். ஏனெனில் அரசியல், சினிமா ஆகியவை குறித்து திமுகவின ருக்கு நன்றாகத் தெரியும்," என் றார் மா. சுப்பிரமணியன்.
தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலர் கராத்தே தியாகராஜன் கூறுகையில், அரசி யல் களம் என்று வந்துவிட்டால் கட்சிதான் தமக்கு முக்கியம் என்றார். தாம் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகன் என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் என்று வந்துவிட்டால் தன் கட்சிக்கு மட்டுமே தமது ஆதரவு இருக்கும் எனத் திட்ட வட்டமாகக் கூறினார். "நான் தீவிர ரஜினி ரசிகன். இருந்தாலும் அரசியல் களத்தில் எனக்கு எனது கட்சி தான் முக்கியம். நான் எனது கட்சிக்கு தான் தேர்தலில் வாக்களிப்பேன். "இதைத்தான் எந்த ஒரு உண்மையான தொண்டனும் செய்வான்," என்றார் கராத்தே தியாகராஜன். ரஜினியின் அரசியல் பிரவேசம் காரணமாக பல கட்சிகளின் வாக்கு வங்கி சேதாரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வை யாளர்கள் பலர் கருதுகின்றனர்.
மா.சுப்பிரமணியன். படம்: தகவல் ஊடகம்

