ஒரு காலத்தில் முன்னணி நாயகர்களின் பட்டியலில் இரண் டாவது வரிசையில் இருந்தவர் தான் விமல். முதல் வரிசையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில், அவர் நடித்த ஒன்றிரண்டு படங்கள் சோடை போகவே பின்னுக்குத் தள்ளப் பட்டார். இந்நிலையில் பூபதி பாண்டி யன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மன்னர் வகையறா'வைத் தான் பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறாராம்.
இந்தப் படம் விமலின் பாரத்தைக் குறைத்து, மீண்டும் அவரை வெற்றி நாய கர்களின் வரிசையில் இடம்பெற வைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதில் விமலுக்கு ஜோடியாக 'கயல்' ஆனந்தியும் சாந்தினியும் நடித்துள்ளனர். கார்த்திக் குமார் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள் ளார். விமலின் தந்தையாக நடித்துள்ளார் பிரபு. இதற்கிடையே, தனக்கு கோடம்பாக்கத்தில் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த 'களவாணி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட் டுள்ளாராம் விமல்.
'மன்னர் வகையறா' படத்தில் விமல், கயல் ஆனந்தி.

