ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. நிகரிகா நாயகியாக நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி பழங்குடி இனத் தலைவராகவும், பல வித்தியாசமான தோற்றங்களிலும் திரையில் தோன்றுவாராம். அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம், முதல் பார்வைக் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதையடுத்து நாளை மலேசியாவில் நடக்க இருக்கும் நட்சத்திரக் கலை விழாவில் இப்படத்தின் பாடல் வெளியீடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஜுங்கா' படத்தின் தலைப்பு முன்னோட்டக் காட்சியையும் (டைட்டில் டீசர்) அதே நிகழ்வில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாம் அப்படக்குழு. விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தது மிக அற்புதமான அனுபவம் என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம் கௌதம் கார்த்திக்.
மலேசியாவில் வெளியிடப்படும் விஜய் சேதுபதி படப் பாடல்கள்
1 mins read
-

