மீண்டும் விஜய்க்கு ஜோடியான கீர்த்தி

1 mins read
f591ab6e-10e6-4137-b305-388a9e1a2788
-

விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் 'தளபதி 62' என்பது தெரிந்த சங்கதிதான். இதுநாள் வரை படத்தின் கதாநாயகிக்கான தேடுதல் வேட்டை நடந்து வந்தது. தற்போது ஒருவழியாக நாயகியைத் தேர்வு செய்திருக்கிறது படக்குழு. 'பைரவா' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் தான் இப்படத்திலும் அவருடன் மீண்டும் ஜோடி சேர இருக்கிறார். சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது சிறு வயது கனவு தற்போது நனவானது என அண்மையில் கூறியிருந்தார் கீர்த்தி. தற்போது விஜய்யின் அடுத்த படத்திலும் தனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது மேலும் உற்சாகம் அளிப்பதாகக் கூறுகிறார். 'தளபதி 62' படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தமாகி உள்ளாராம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.