தெலுங்கில் கால்பதிக்கும் விஜய் சேதுபதி

1 mins read
a923af14-f3e3-41f2-8c42-8112bb5724bf
-

தமிழ்த் திரையுலகில் வெற்றி வலம் வந்த மகிழ்ச்சியில் தற்போது தெலுங்கில் கால்பதிக்கிறார் விஜய் சேதுபதி. 'சைரா நரசிம்ம ரெட்டி' என்ற தலைப்பில் தெலுங்கில் சரித்திரப் படம் ஒன்று உருவாகி வருகிறது. உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இவருக்கு ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா. இது சிரஞ்சீவி நடிக்கும் 151ஆவது படம். சுரேந்தர் ரெட்டி இயக்க, ராம் சரண் தயாரிக்கும் இப்படம் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகிறதாம். பண்டைய காலத்தில் தெலுங்கு தேசத்தில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

நரசிம்ம ரெட்டியின் அதீத நம்பிக்கைக்கு உரியவராக இருந் தவர் ஒப்பாயா. இந்த கதா பாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி உள்ளாராம். இதன் மூலம் அவர் தெலுங்கு திரையுலகில் கால்பதிக்கிறார். படம் முழுவதுமே சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதால், அதிக நாட்கள் கால்‌ஷீட் ஒதுக்கிக் கொடுத்து இருக்கிறாராம் விஜய் சேதுபதி.