ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பெயரைக் குறிப்பிட்டு, சமந்தா குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு உரையாடல்களை நடத்தி வருகின்றனர். விஜய் சேதுபதி நடிக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ஷில்பா என்று அறிவித்து அதன் புகைப்படத்தையும் வெளியிட்டனர். இப்படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், சமந்தாவின் கதாபாத்திரம் வேம்பு என்றும் அதற்கான முன்னோட்டம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
'வேம்பு'வாக நடிக்கும் சமந்தா 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் சமந்தா
1 mins read
-

