'ஜல்லிக்கட்டு அரசியல் குறித்துப் பேசும் படம்'

'ஜல்லிக்கட்டு அரசியல் குறித்துப் பேசும் படம்'

1 mins read
01424bc6-9bc1-4f03-afd0-9c0a4f1e2928
-

கிராமத்துப் பின்னணியில் பி.ஜி. முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மதுர வீரன்'. படத் தின் நாயகன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன். படம் குறித்து சுவாரசியமாக விளக்குகிறார் முத்தையா. "இது ஜல்லிக்கட்டு பற்றியும் அதில் உள்ள அரசியல் பற்றியும் பேசும் படம். ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தில், அதுவும் ஒருசில இடங்களில் மட்டும் முக்கியத்து வம் பெற்றுள்ள ஒரு விஷயம் என சிலர் தவறாக கருதுகின்றனர்.

ஜல்லிக்கட்டு என்பது பொங்கல் பண்டிகையின்போது மட்டும் நடத்தப்படும் விளையாட்டு அல்ல. அதற்கும் மேலானது. "இது ஒரு பாரம்பரியம் என லாம். ஆதி தமிழகத்தின் முன் னோர்கள் முதற்கொண்டு இருக் கும் பெரும் ரசனை கொண்ட விளையாட்டு. "சில விஷயங்கள் கண்ணால் பார்த்தாலும் பிறர் சொல்லிக் கேட்டாலும் புரியாது. திரைப் படங்கள் வாயிலாகத்தான் சில வற்றை மக்களுக்கு உணர்த்த முடியும்.

'மதுர வீரன்' படத்தின் ஒரு காட்சியில் சண்முக பாண்டியன்.