தன்னைப் பற்றிய அண்மைய குற்றச்சாட்டுகளை அறவே மறுத்துள்ளார் நடிகர் ஜெய். இவரும் அஞ்சலியும் இணைந்து நடித்த 'பலூன்' திரைப்படம் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் சினீஷ் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஜெய் மீது சுமத்தியுள்ளார். 'பலூன்' படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற ஜெய் ஒத்துழைக்கவில்லை என்பதே சினீஷ் முன்வைத்துள்ள முதன்மைக் குற்றச்சாட்டு ஆகும். இதன் காரண மாக தயாரிப்புத் தரப்புக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ள தாக அவர் கூறி உள்ளார். படப் பிடிப்புக்கு ஜெய் மது அருந்தி விட்டு வருவார் என்றும் ஈடு பாடு இல் லாமல் நடித்த தா க வு ம் சினீஷ் தெரி வித்துள்ளார்.
"படப்பிடிப்பு எப்போது முடியும், மீண்டும் எப்போது தங்குவிடுதிக்குச் சென்று மது அருந்தலாம் என்ற நினைப்பிலேயே இருப்பார் ஜெய். "கொடைக்கானலில் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்த காத்திருந்த போது, அவர் உரிய நேரத்தில் வரவில்லை. இது போன்ற காரணங்களால் தான் நஷ்டம் ஏற்பட்டது," என்று இயக்குநர் சினீஷ் சாடியுள்ளார். ஜெய்யின் செயல்பாடுகளால் இவர் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

