நகைச்சுவை கதாபாத்திரத்தில் நிக்கி

நகைச்சுவை கதாபாத்திரத்தில் நிக்கி

1 mins read
fecfc4b8-19f4-42ff-ae26-964bc44e0ed0
-

நிக்கி கல்ராணிக்கு புதிய வாய்ப்புகள் தாராளமாக வருகின்றன. தற்போது ஜீவாவுடன் 'கீ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது நகைச்சுவை கலந்த குடும்பக் கதையாம். அண்மையில் தணிக்கைக் குழுவினர் இப்படத்தைப் பார்த்து பாராட்டி உள்ளனர். இதையடுத்து எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 9ஆம் தேதி படம் வெளியாகிறது.

"செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த காலீஸ் இயக்கி உள்ள இந்தப் படத்தில் எனக்கு நகைச்சுவையுடன் கூடிய கதாபாத்திரம் அமைந்துள்ளது. அனைகா சோதி, ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் அசத்தியுள்ளனர். "படம் பார்க்கும் அனைவரும் கவலையை மறந்து சிரிப்பதுடன், நல்ல குடும்பப் படத்தைப் பார்த்த திருப்தியைப் பெறுவர். இதுவே இப்படத்தை நான் தேர்ந்தெடுக்கக் காரணம். "இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களால் வரவேற்கப்படும் என நம்புகிறேன்," என்கிறார் நிக்கி கல்ராணி.