'நிமிர்' படத்துக்குத் தணிக் கைக் குழுவினர் 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவரது ஜோடியாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடித்துள்ளனர். இந்நிலையில் வரும் 26ஆம் தேதி வெளியாகிறது இப்படம். இயக்குநர் மகேந்திரன் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் மறுபதிப்பாக இப்படம் உருவாகியுள்ளது. குற்றா லத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித் துள்ளார் இயக்குநர் பிரியதர்ஷன். "தமிழ் மறுபதிப்பிற்கு சமுத் திரக்கனி வசனம் எழுதியுள்ளார்.
'நிமிர்' படத்தில் இடம்பெறும் காட்சியில் உதயநிதி, எம்.எஸ். பாஸ்கர்.

