'கலகலப்பு 2'

'கலகலப்பு 2'

1 mins read
662d573f-c45e-423c-adc8-3a810d421bce
-

'ஹிப் ஹாப்' ஆதி இசையமைப்பில் உருவாகியுள்ளது 'கலகலப்பு 2'. இப்படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் மற்ற பாடல் களை வெளியிட உள்ளனர். இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அண்மையில் இதன் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகின. இதற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர். இதனால் படத்தின் வியாபாரமும் சூடுபிடித்திருக்கிறதாம். படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது. 'கலகலப்பு 2'ல் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். நந்திதா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். சதீஷ், ரோபோ ஷங்கர், மனோ பாலா, விடிவி கணேஷ், வையாபுரி, சந்தான பாரதி, விச்சு உள்ளிட்ட பலரும் உள்ளனர்.