'உள்ளே வெளியே'

'உள்ளே வெளியே'

1 mins read
92043f01-293e-4b21-b6af-4328db6e098c
-

கடந்த 1993ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்ற படம் 'உள்ளே வெளியே'. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளாராம் பார்த்திபன். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "2018ல் துவங்கும் 'உள்ளே வெளியே' என்ற வணிக ரீதியிலான நகைச்சுவைப் படத்திற்கு 18 வயதில் அமைதியான வசீகரமான பெண்ணும் 28 வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு போன்ற பெண்ணும் 38 வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவை," என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படம் குறித்த மேலும் சில முக்கிய அறிவிப்புகளை பார்த்திபன் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.