மணியால் மெருகேற்றப்பட்ட கதாபாத்திரம்

மணியால் மெருகேற்றப்பட்ட கதாபாத்திரம்

1 mins read
28fe4833-0846-4a84-99c5-6841830ca011
-

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய் சேதுபதி. இதில் அவருடன் அரவிந்த்சாமி, சிம்பு, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர் என்பது தெரிந்த சங்கதி தான். இது சண்டைக் காட்சிகள் நிறைந்த திகில் படமாக உருவாக உள்ளதாம். இந்நிலையில், விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை வெகுவாக மெருகேற்றி உள்ளாராம் மணிரத்னம். தொடக்கத்தில் அவருக்கு வழங்கப்பட்டது சிறிய கதாபாத்திரம் தான். ஆனால் கதையை மெருகேற்றிய போது சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கூடிவிட்டதாகத் தகவல். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கிறார்.