பிரதமர் கதாபாத்திரத்தில் வித்யா பாலன்

1 mins read
fa489204-596b-4fda-bb12-9e85640f4631
-

காலஞ்சென்ற நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை சித்திரித்த 'டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற வித்யா பாலன் அடுத்து, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்திரா காந்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களைத் தொகுத்து பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும் எழுத்தாளருமான சகாரிகா கோஷ், 'இந்திரா: இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பிரதமர்' என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூலை அடிப்படையாக வைத்து உருவாகும் படத்திலேயே இந்திரா காந்தியாக நடிக்க உள்ளார் வித்யா. இதற்காக அந்த நூலின் உரிமையைக் கணிசமான விலை கொடுத்து வாங்கி உள்ளார். இது தொடர்பான அறிவிப்பைச் சகாரிகா கோஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.