மற்ற நடிகர்களைவிட சூர்யாவுக்கு ரசிகைகள் பட்டாளம் அதிகம். அதுவும் கேரளாவில் அவருக்கென தனி ரசிகைகள் உள்ளனர். சூர்யாவின் வசீகரிக்கும் முகத்திற்காகவும் புன்னகைக்காகவும் 'தானா சேர்ந்த கூட்டம்' அது. இந்நிலையில், சூர்யா நடிப்பில் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் நேற்று வெளியானது. பொதுவாக முன்னணி நடிகர்களின் படம் என்றால் அவரது ரசிகர்களுக்கு என்று சிறப்பு காட்சி திரையிடப்படுவது வழக்கம். ஆனால் சற்று வித்தியாசமாக ரசிகை களுக்கு விருந்தளிக்கும் வகையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் சிறப்பு காட்சி பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யா தனது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுத்து இருக்கிறார்.
1 987ல் மும்பையில் நடந்த உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்திப் படமான 'ஸ்பெஷல் 26' படத்தின் கதைக் களத்தை வைத்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். படத்தில் சூர்யா தனக்கென ஒரு போலி சிபிஐ கும்பலை வைத்துக்கொண்டு அரசாங் கத்தை ஏமாற்றுபவர்களையும் லஞ்சம் வாங்கு பவர்களையும் ஓட விடுகின்றார். அதற்கு உறுதுணையாக ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன் என ஒரு கூட்டம்.
80களில் நடப்பது போன்ற இப்படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நகர்கிறது. ஆனால் படத்தின் உச்சக்கட்ட காட்சியை இன்னும் அழுத்தமாக முடித்திருக் கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங் களில் கருத்து தெரிவித்துள்ளனர். 'அயன்', 'மௌனம் பேசியதே' படங்களில் பார்த்த அதே சூர்யாவை மீண்டும் பார்ப்பது போல் உள்ளது என்கிறார்கள் ரசிகர்கள். நாயகி கீர்த்தி சுரேஷுடன் இளமை துள்ளலுடன் திரையில் வலம் வரும் சூர்யாவைக் காண ரசிகைகள் மட்டு மல்ல ரசிகர் கூட்டமும் சேரும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, கேரளாவில் நடந்த இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சூர்யா, "எனக்கு கேரளாவில் நிறைய ரசிகர், ரசிகைகள் இருக்கிறார்கள். இதனால் நேரிடையாக மலையாளப் படத்தில் நடிக்கும்படி பலரும் கேட்டு வருகிறார் கள். "எனக்கும் மலையாளப் படத்தில் நடிக்க ஆசை உள்ளது. அதற்காக பொருத்தமில்லாத கதாபாத் திரத்தில் நடிக்கமாட் டேன்," என்றார்.

