விஜய் ஆன்டனி படத்தில் அஞ்சலிக்கு முக்கியத்துவம்

1 mins read
76b17df7-96f3-4084-8030-650e8b423a01
-

'பலூன்' படத்திற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பரவலாக நடித்து வருகிறார் அஞ்சலி. இதில் 'காண்பது பொய்' என்ற படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பவர், அடுத்தபடியாக கதையின் நாயகி யாக நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அத்துடன் தற்போது தெலுங்கில் அஞ்சலியின் வாய்ப்புகள் நல்ல நிலையில் இருப்பதால் தெலுங்கு வியாபாரத்தையும் கருத்தில் கொண்டு படம் இயக்குபவர்கள் அஞ்சலியைத் தங்கள் படங்களில் இணைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அவ்வகையில் ஜெய்யுடன் நடித்த 'பலூன்' படத்தை அடுத்து தற்போது விஜய் ஆன்டனி நடிக்கும் 'காளி' படத்திலும் இணைந்திருக்கிறார் அஞ்சலி. கிருத்திகா உதயநிதி இயக்கும் இந்தப் படத்தில் விஜய் ஆன்டனியுடன் சுனைனா, அமிர்தா போன்ற நடிகைகள் தான் முன்னணி பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர். பின்னர் அஞ்சலியை இந்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்தனர். விஜய் ஆன்டனி நடித்த 'பிச்சைக்காரன்' தெலுங்கில் பெரிய அளவில் வசூலித்ததை அடுத்து அவர் நடிக்கும் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் மறு பதிவாகி வருகின்றன.

இந்நிலையில் 'காளி' படத்தையும் தெலுங்கில் வெளியிடுகிறார்கள். அதனால் தெலுங்கில் வாய்ப்புகள் இருக்கும் ஒரு நடிகை முக்கிய பாத்திரத்தில் நடித்தால் படத்தின் வியாபாரத்திற்குப் பலமாக இருக்கும் என்பதால் இப்போது அஞ்சலியின் பாத்திரத்தை வலுவானதாக மாற்றியுள்ளார்களாம்.