தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'நேரத்தை தவறவிட்டால் கவுண்டமணிக்கு பிடிக்காது'

1 mins read
ef878264-36b3-4037-882a-441f70b8fb49
-

ஒரு காலத்தில் கவுண்டமணி, செந்தில் ஜோடி இல்லை என்றால் படத்தைப் பார்ப்பதற்கே பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் அவர்கள் செய்யும் நகைச்சுவைக் காட்சிகள் பிரபலம். இப்படி இருவரும் இணைந்து நடித்த தருணம் குறித்து இப்போது கருத்துகளைப் பகிர்ந்துகொண் டுள்ளார் செந்தில். "கவுண்டமணி நல்ல 'டைமிங்' கலைஞர். சரியான நேரத்தில் வச னம் பேசாவிட்டால் அதை அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார். அவரு டன் நடிக்கும்போது நமது கவனம் சிதறினாலும் அவர் யாராக இருந்தாலும் அதையும் ஏற்றுக் கொள்ளமாட்டார். அவருடன் சேர்ந்தால் நமக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்," என்று கூறியுள்ளார் செந்தில். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருக் கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத் தில் நடித்துள்ள செந்தில் தனது நடிப்பு அனுபவம் குறித்து மனம் திறந்து பேசினார்.