நதியாவுக்கு பதில் ரம்யா ஒப்பந்தம்

நதியாவுக்கு பதில் ரம்யா ஒப்பந்தம்

1 mins read
cc811f47-5fb5-4042-8e34-7a94e67906cd
-

'ஆரண்ய காண்டம்' படத்திற்குப் பிறகு தியாக ராஜன் குமாரராஜா இயக்கும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் முதலில் நதியா ஒரு வில்லி பாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். 'ஆரண்ய காண்டம்' படம் பிடித்திருந்ததால் கதை கேட்காமல் நம்பி ஒப்புக்கொண்டாராம் நதியா. ஆனால் நடிக்க வந்த பிறகுதான் அது கொடூர வில்லி பாத்திரம் என்பது தெரியவந்ததாம். இதில் நடித்தால் தனது இமேஜ் பாதிக்கப்படும் என்று கருதியவர் படத்தில் இருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்குப் பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். "படத்திலிருந்து விலகியது உண்மைதான் ஆனால் அதற்கான காரணத்தைச் சொல்லமுடியாது," என்று கூறியிருக்கிறார் நதியா.