நடிகை தீபிகா படுகோனேவும் நடிகர் ரன்வீர் சிங்கும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் தனது பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாடினார் தீபிகா. இந்த கொண்டாட்டத்தில் ரன்வீர் சிங்கின் குடும்பத்தாரும் பங்கேற்றனர். உற்சாகமான அந்தத் தருணத்தின்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் தீபிகாவுக்கு விலை உயர்ந்த மோதிரம் ஒன்றை ரன்வீர் பரிசளித்ததாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இந்நிலையில் இருவரும் இணைந்து கோவாவில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருப்பதாகவும், லண்டனில் ஒரு வீட்டை வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஒரு படத்துக்கு ரூ.9 கோடி சம்பளம் வாங்குகிறார் தீபிகா. இவர் நடித்த 'பத்மாவத்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தீபிகா படுகோனேவும் ரன்வீர் சிங்கும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஏற்கெனவே பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என இரு வீட்டாரும் முடிவு செய்திருப்பதாகத் தகவல்.
தீபிகாவுக்கு விரைவில் கெட்டிமேளம்
1 mins read
-

