கீர்த்தி சுரேஷ் தற்போது கவிஞர் அவதாரம் எடுத்துள்ளார். அண்மையில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா வில் கலந்துகொண்ட அவர், கரப்பான் பூச்சி பற்றி தான் எழுதிய ஒரு கவிதையைப் படித்து அசத்தியுள்ளார். இயக்குநர் லிங்குசாமியின் 'லிங்கூ-ஹைக்கூ' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் தானே சொந்தமாக எழுதிய ஒரு கவிதையை வாசித்தார். கரப்பான்பூச்சி பற்றிய அக்கவிதையைப் படித்து, அது தனக்கு மிகவும் பிடித்தமானது என்றார். விஷால் பேசுகையில், தனக்கு கவிதை, புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை என்றும் 'லிங்கூ-ஹைக்கூ' புத்தகமே தான் வாசிக்க இருக்கும் முதல் கவிதை புத்தகம் என்றும் கூறினார்.
கவிஞராக மாறிய கீர்த்தி சுரேஷ்
1 mins read
-

