தமிழ் சினிமா தற்போது நல்ல பாதைக்குத் திரும்பியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பெண்ணிய படங்களாக வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தன. இப்போது விவசாயம் சார்ந்த கதையம்சம் உடைய படங்களாகத் தயாராகி வருகின் றன. அண்மையில் வெளியான விளம் பரங்களே அதற்கு சாட்சி. இதுவரை தனுஷ் இயக்கும், நடிக்கும் படங்களுக்கு எல்லாமுமாக இருந்த இயக்குநர் சுப்ரமணிய சிவா இயக்கும் புதிய படம் 'வெள்ளை யானை'. சமுத்திர கனி கதை நாயகனாக நடிக்கிறார். தஞ்சை மண்ணைச் சார்ந்தவர் சுப்ரமணிய சிவா. அண்மையில் கூட 'கொலை விளையும் நிலம்' என்ற ஆவணப் படத்தை தனுஷின் கவனத்துக்குக் கொண்டு சென்று அவர் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிகள் கிடைக்கச் செய்தவர்.
எனவே விவசாயிகளின் வலிகளைத் தனது புதிய படத்தில் அவர் மையப்படுத்தி இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக் கிறது. விவசாயம் சார்ந்த கதையாக இருந் தாலும் நகைச்சுவையான படமாகவும் இருக் குமாம் 'வெள்ளை யானை'. அடுத்து இயக்குநர் பாண்டிராஜ் இயக் கத்தில் கார்த்தி, சாயிஷா சாகல் நடிக்கும் படம் 'கடைக்குட்டி சிங்கம்'. விவசாயம் சார்ந்த படம் என்பதை நேரடியாகவே சொல்லி இருக்கிறார்கள். சத்யராஜின் மகனாக நடிக்கிறார் கார்த்தி. தந்தையின் விவசாய நிலங்களையும் தாய் மண்ணின் விவசாயத்தையும் காப்பாற்ற கார்த்தி போராடுவதுதான் கதையாம்.

