பிப்ரவரி 9ஆம் தேதி வெளியீடு காண்கிறது 'கீ'

பிப்ரவரி 9ஆம் தேதி வெளியீடு காண்கிறது 'கீ'

1 mins read
204574ae-7c87-41f3-9a40-f8a85d27d2ed
-

ஜீவா நாயகனாக நடிக்கும் படம் 'கீ'. கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார் காளிஸ். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். நிக்கி கல்ராணி, அனைக்கா சோதி என படத்தில் இரு நாயகிகள் உள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. "மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூர்யா எதிர்மறை வேடத்தில் நடிக்கிறார். ஜீவாவின் தந்தை வேடத்தில் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் நடிக்கிறார். மதன் கார்க்கி, தாமரை, சுபு, மணி அமுதவான் ஆகியோரின் பாடல் வரிகளில் உருவாகி இருக்கும் பாடல்கள் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும். நகைச்சுவைப் பகுதிக்கு ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். இது முழுநீள நகைச்சுவைப் படம். அனைத்துவித ரசிகர்களையும் இப்படம் கவரும் என நம்புகிறோம். பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்," என்கிறார் காளிஸ்.