'நாடோடிகள் 2' படத்துக்காக சசிகுமாரும் சமுத்திரக்கனியும் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகமான தகவலாக அமைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் நாயகியாக அஞ்சலி ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் அதுல்யா ரவியையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். 'நாடோடிகள்' முதல் பாகத்தில் சசிகுமாரின் ஜோடியாக அனன்யாவும் தங்கையாக அபிநயாவும் நடித்திருந்தனர். தற்போது இரண்டாம் பாகத்தில் சசிகுமாருக்கு அஞ்சலி ஜோடி என்றும் அதுல்யா ரவி தங்கை என்றும் கூறப்படுகிறது. முதல் பாகத்தைப் போலவே இதிலும் கனமான கதையைக் கையாளப் போகிறார்களாம். சமுத்திரக்கனியும் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை நாடோடிகள் பிலிம்ஸ் மற்றும் இன்ஸ்பைர் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்க உள்ளன. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் பங்கேற்க உள்ள இதர கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் கூட்டணி; ரசிகர்கள் மகிழ்ச்சி
1 mins read
-

