நயன்தாரா முடிவு; நாயகர்கள் வருத்தம்

நயன்தாரா முடிவு; நாயகர்கள் வருத்தம்

1 mins read
dc3f6172-dffa-472e-9edf-338a4c543d21
-

ரசிகர்களின் ஆதரவு இன்றி தன்னால் தற்போதுள்ள உயரத்தை அடைந்திருக்க முடியாது என்று கூறியுள்ளார் நயன்தாரா. அண்மையில் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் தொகுப்பாளர் பல சுவாரசியமான கேள்விகளை முன்வைத்தார். அப்போது அவருக்குப் பிடித்தமான கதாநாயகன் யார் என்று கேட்டபோது சற்றும் தயக்கம் இல்லாமல் அஜித் என்று குறிப்பிட, அரங்கில் பலத்த கரவொலி. அதன் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. விஜய்யும் தமக்குப் பிடித்தமான நாயகன்தான் என்றார். இதற்கிடையே இனி வயது குறைந்த நாயகர்களுடன் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறாராம் நயன். காரணம் அண்மைய படங்கள் குறித்து வெளியான விமர்சனங்கள்தானாம். இதனால் இளம் நாயகர்கள் சிலர் ரொம்பவே வருத்தத்தில் இருப்பதாகத் தகவல்.