'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெளியீட்டையொட்டி ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் சூர்யா. ராஜமுந்திரியில் உள்ள மேனகா திரையரங்கத்துக்கு அவர் சென்றபோது கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டதாம். அனைவரும் முண்டியடித்து சூர்யாவை நெருங்க, பாதுகாவலர்களால் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் போனது. அதையடுத்து திரையரங்கின் பின்பக்கம் சென்ற சூர்யா, அங்கிருந்த இரும்புக் கதவின் மீது ஏறிக் குதித்து வெளியேறி உள்ளார். இது தொடர்பான புகைப்படமும் காணொளியும் இணையத்தில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
சூர்யாவை சூழ்ந்த ஆந்திர ரசிகர்கள்
1 mins read
-

