மீண்டும் தடைப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என அவரது சகோதரர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். முன்பே அறிவித்தபடி வரும் 22ஆம் தேதி பாவனாவின் திருமணம் நடைபெறும் என்று அவர் சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பாவனாவுக்கும் தயாரிப்பாளர் நவீனுக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது. எனினும் சில காரணங்களால் திருமணம் நடை பெறுவது தள்ளிப் போனது. இந்நிலையில் 22ஆம் தேதி திருச்சூரில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சில வதந்திகள் பரவின. இதையடுத்து திருமணம் நடை பெறுவதை ராஜேஷ் உறுதிப்படுத்தி உள்ளார். திருமணத்துக்கான ஏற் பாடுகள் நடந்து வருகின்றன.2018-01-19 06:00:00 +0800
'திருமணம் நடப்பது உறுதி'
1 mins read
-

