உதயநிதி ஸ்டாலின்: நாயகனுக்கு நண்பனாக நடிக்கவும் தயார்

உதயநிதி ஸ்டாலின்: நாயகனுக்கு நண்பனாக நடிக்கவும் தயார்

1 mins read
dadad0e0-2f57-4039-a963-19f0837e5d8f
-

பிரியதர்ஷன் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவான 'நிமிர்' படம், வரும் 26ஆம் தேதி திரைக்கு வருகிறது. உதயநிதி ஸ்டாலினுடன் நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குநர் மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகிய இருவரும் இசை அமைத்திருக்கிறார்கள். இதன் பாடல் வெளியீட்டு விழா வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்திருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். "அவர் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்திற்கு என்னை நாயகனாக்கி இருக்கிறார். "முதல் நாள் படப்பிடிப்பிற்குச் செல்லும்போது மிகவும் பயந்தேன். ஆனால் அவர் திட்டினால்கூடச் சிரித்துக்கொண்டே திட்டினார்.

ஒரு குழந்தையிடம் வேலை வாங்குவது போன்று என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்தார். "அதோடு சினிமாத்தனம் இல்லாத ஒரு படத்தை எடுத்துள்ளார். அந்த அளவுக்கு யதார்த்தமான படம் இந்த 'நிமிர்'. அவர் இயக்கத்தில் நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது. "தொடர்ந்து பிரியதர்ஷன் இயக்கும் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அடுத்தபடியாக அவர் இயக்கும் படத் தில் என்னை கதாநாயகனுக்கு நண்ப னாக நடிக்க அழைத்தாலும் நடிப்பேன். "மேலும், இந்தப் படத்தில் வில்ல னாக நடித்துள்ள சமுத்திரகனிக்கும் எனக்கும் இடையே ஒரு சண்டைக் காட்சி உள் ளது.