ஓவியா, வேதிகா உள்ளிட்டோரு டன் 'காஞ்சனா 3' படத்தைத் தற்போது இயக்கி, நடித்து வரும் ராகவா லாரன்ஸ் அடுத்த படத்திற்கும் தயாராகிவிட்டார். அடுத்து 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ள புதிய கதையில் லாரன்ஸ் நடிக்கவுள்ளார். அந்தப் படத்திற்கு 'கால பைரவா' எனப் பெயர் வைக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளி யாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்புத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தையும் லாரன்ஸ் நடித்து, இயக்கி, தனது ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்க உள்ளார். பரதன் இயக்கத்தில் விஜய்=கீர்த்தி சுரேஷ் நடித்த படத்திற்கு 'பைரவா' எனத் தலைப்பு வைத்தபோது, அதை முன்பே பதிவு செய்து வைத்திருந்த ராகவா லாரன்ஸ், விஜய்க்கு விட்டுக்கொடுத்தார். அதன் பிறகு இப்போது தனது படத்திற்கு 'கால பைரவா' என்று தலைப்பிட்டு உள்ளார் லாரன்ஸ். இதையடுத்து இன்னும் இரண்டு கதைகள் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் இதுபற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

