தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி இருந்த 'மெர்சல்' படத்தில் தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் நித்யா மேனனின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்திருந்தது. நித்யா மேனன் எப்போதும் கவர்ச்சியாக நடிக்க மறுத்து விடுவார். அப்படிப்பட்ட நித்யா மேனன் தற்போது துணிந்து தெலுங்குப் படத்தில் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சக நடிகையுடன் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சியிலும் நடித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இதை நிச்சயம் தணிக்கைக் குழு அனுமதிக்காது எனவும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இதைப் பற்றி 'இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் துணிந்து நடித்துள்ளேன்,' என நித்யா மேனன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நித்யா மேனனின் துணிச்சலான செயல்
1 mins read
-

