'ஓவியாவால் படத்தின் மதிப்பு உயர்ந்தது'

'ஓவியாவால் படத்தின் மதிப்பு உயர்ந்தது'

1 mins read
620e6e89-5f46-4325-b4ae-c81172e1f372
-

'கணேசா மீண்டும் சந்திப்போம்' என்ற வித்தியாசமான தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. ரத்தீஷ் எராட் இயக்குகிறார். பாண்டியராஜின் மகன் பிருத்வி ராஜ் நாயகனாக நடிக்க, அவரது ஜோடியாக ஓவியாவும் தேவிகா நம்பியார் என்ற புதுமுகமும் நடித் துள்ளனர். இருசக்கர வாகனத்தை உயிருக்குயிராக நேசிக்கும் ஒருவ ரது வாழ்க்கையில் நடக்கும் சம்ப வங்களின் தொகுப்பாக உருவா கிறதாம் இப்படம்.

முழுக்க நகைச்சுவையுடனும் நல்ல கருத்துகளுடனும் நகரும் கதை என்கிறார் இயக்குநர். இதில் வசதி படைத்த வீட்டைச் சேர்ந்த அப்பாவிப் பெண் வேடத்தில் அசத்தியுள்ளாராம் ஓவியா. "நவநாகரிகத் தோற்றத்தில், வண்ணமயமான ஆடைகளில் ஓவியாவை திரையில் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் பரவசம் அடை வார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதை வென் றெடுத்த பின்னர் அவர் ஒப்புக் கொண்ட முதல் படம் இது. "படத்தில் இன்னொரு நாயகி யும் இருப்பதால் ஓவியாவிடம் கதை, திரைக்கதையை முழுமையாகக் கொடுத்துப் படிக்கச் சொன்னோம். அவருக்கு மிகவும் பிடித்துப் போனது," என்கிறார் இயக்குநர் ரத்தீஷ் எராட்.

ஓவியாவின் அறிமுகக் காட் சியை கும்பகோணம் அருகே பட மாக்கி உள்ளனர். இது குறித்து தகவலறிந்த ரசிகர்கள் ஏராளமா னோர் அங்கு கூடிவிட்டனர். இதனால் காலை தொடங்கி மாலை வரை படப்பிடிப்பை நடத்த திட்ட மிட்டிருந்த படக்குழுவினர் திண் டாடிப் போயிருக்கிறார்கள்.