'எனை நோக்கி பாயும் தோட்டா'

'எனை நோக்கி பாயும் தோட்டா'

1 mins read
927f77b9-62aa-41ed-a199-1b9e3d24d199
-

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. தனுஷ் நாயகனாகவும் மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் தயாரிப்பாளரும் கௌதம்தான். தர்புகா சிவா இசையமைக்க, மனோஜ் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். ராணா டகுபதி எதிர்மறை வேடத்தில் நடிப்பதாகத் தகவல். சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். 2016ஆம் ஆண்டு தொடங்கிய படப்பிடிப்பு, சில பிரச்சினைகளால் இடையில் திடீரென நின்று போனது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதி முதல் பட வேலைகள் மீண்டும் துவங்கியுள்ளன. எனவே, விரைவில் திரைகாணும் என எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.