கடந்த ஆண்டு இறுதியில் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி ஜோடி சேர்ந்து நடித்த 'பலூன்' படம் ரசி கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என மகிழ்ந்தனர் அப் படத்தின் தயாரிப்பாளர்கள். எனினும் இயக்குநர் சினிஷ் மட்டும் அதிருப்தி குரல் எழுப்பி இருந்தார். "தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் சூழ லில் நான் இல்லை" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். இதையடுத்து, நடிகர் ஜெய் மெத்தனப் போக்குடன் செயல்பட் டார், மது அருந்திவிட்டு படப்பிடிப் புக்கு வந்தார், பின்குரல் பதிவு செய்யும் பணிகளைத் தாமதப்படுத்தி னார் என்று தயாரிப்பாளர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரி வித்தனர். இந்நிலையில் 'பலூன்' வெளியாகி 25 நாட்களாக திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் படக்குழுவினரோ, "சுமார் வெற்றி" என்று குறிப்பிட்டு விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.
'பலூன்' படத்தின் ஒரு காட்சியில் ஜெய், ஜனனி அய்யர்

