தனுஷ் அறிமுகப்படுத்தும் புது நாயகன்

தனுஷ் அறிமுகப்படுத்தும் புது நாயகன்

1 mins read
a811d6f4-8d65-4a3f-ae41-f94781953420
-

'வுண்டர்பார் நிறுவனம்' சார்பில் தனுஷ் தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாகிறது. இதில் புது நாயகனை அறிமுகப்படுத்த உள்ளார். 2016ஆம் ஆண்டில் வெளியான மலையாளப் படம் 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்'. நதீர்ஷா இயக்கத்தில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், பிரயாகா நடிப்பில் வெளிவந்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை தான் தமிழில் மறுபதிப்பு செய்ய இருக்கிறார் தனுஷ்.

படத்தை இயக்கும் பொறுப்பை யாரிடம் கொடுக்கலாம் என தீர யோசித்துக் கொண்டிருக்கிறாராம். எனினும் கதாநாயகனை மட்டும் தேர்வு செய்துவிட்டனர். விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் நன்கு அறிமுகமான தீனா தான் தனுஷ் தேர்வு செய்திருக்கும் கதாநாயகன். 'ப.பாண்டி' படத்தில் தனு‌ஷுக்கு நண்பராக நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.