திரைத்துறையில் கால்பதிக்க வேண்டாம் என தனது தந்தை அறிவுரை கூறியதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நடைபெற்ற நாடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், நடிப்பு மீதான ஆர்வத்தால் சினிமாவிற்கு வந்ததாகக் குறிப்பிட்டார். "இன்றைய இளைய தலைமுறை யினர் படித்து முடித்தவுடன் வேலை தேடி வெளிநாடு சென்று விடுகின்றனர். பெற்றோரும் அதைத் தான் விரும்புகின்றனர். என் தந்தை சிவகுமார் சினிமா தொழில் வேண்டாம். வேறு நல்ல வேலை தேடிக்கொள் என்றுதான் கூறினார்," என்றார் கார்த்தி.
நடிகர் சங்கத்திற்கான கட்டடப் பணி நிறைவடைந்தவுடன் நாடகத் தொழிலை நவீனப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட அவர், சினிமாவைப் போன்று நாடகத்திற்கும் பொது மக்கள் அதிக ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். "நாடகங்களை அனைத்துத் தரப்பு மக்களும் கண்டு ரசிக்கும் வகையில் தொழில்நுட்ப உத்திகள் புகுத்தப்படும். நாடகங்களை ஆதரிப் பதன் மூலம் திரைத்துறையும் வளர்ச்சி காணும். நாடகங்களுக்கு நடிகர் சங்கம் ஆதரவு அளிக்கும்," என்றார் கார்த்தி.

