'பக்கா' படத்தில் விக்ரம் பிரபுவுடன் நிக்கி கல்ராணி

'பக்கா' படத்தில் விக்ரம் பிரபுவுடன் நிக்கி கல்ராணி

1 mins read
5eb0e8ae-2dbd-423e-80a5-8791e96e8688
-

'பக்கா' படத்தில் நிக்கி கல்ராணி, நடிகர் ரஜினியின் தீவிர ரசிகையாக நடித்துள்ளார். இத்தகவலை சென்னையில் நடைபெற்ற படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வில் அவரே பெருமையுடன் குறிப்பிட்டார். எஸ்.எஸ்.சூர்யா இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகன் விக்ரம் பிரபுவும் நகைச்சுவையில் அசத்தி உள்ளாராம். பாடல் வெளியீட்டு விழாவுக்கு அவரால் வர முடியவில்லை. வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்தவர், சென்னை நோக்கி வந்தபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டாராம். படக்குழுவினரைத் தொடர்புகொண்டு விவரம் தெரிவித்துள்ளார். இதையடுத்து விக்ரம் பிரபு கைபேசி வழி அனுப்பி வைத்திருந்த வாழ்த்துச் செய்தியை மேடையேறி பொறுப்பாகப் படித்து முடித்தார் நிக்கி கல்ராணி. 'பக்கா' படம் விரைவில் திரைகாண இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.