மீனவ இளைஞர் வேடத்தில் அசத்த வருகிறார் விஜய்

மீனவ இளைஞர் வேடத்தில் அசத்த வருகிறார் விஜய்

1 mins read
0829850c-0ea1-4ded-8fb4-986859c25cad
-

விஜய் நடித்து வரும் புதிய படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் அவரது ரசிகர்களை உற்சாகத் துள்ளல் போட வைக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்படுகிறது. இதற்குமுன் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய இரண்டுமே பெரிய அளவில் பேசப்பட்ட, வெற்றி பெற்ற படங்கள்.

இரண்டிலுமே சமூகத்துக்குத் தேவை யான நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி இருந்தார் முருகதாஸ். இதே போல் இதிலும் சமூகத்தைச் சீரழித்து வரும் முக்கியமான பிரச்சினை குறித்து அலசப் போகிறாராம். நடிகர்கள் அரசியலில் காலெடுத்து வைக்கும் பரபரப்பான ஒரு சூழ் நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசத் துக்குக் கைகொடுக் கும் வகையில் இந்தக் கதை அமையும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். "தற்போது சமூ கத்தில் புரையோ டிக் கிடக்கும், மக் கள் அனுபவித்து வரும் கொடு மையான ஒரு வி ஷ ய த் து க் கு விடை சொல்லும் வகையில் உருவா கிறது 'விஜய்-62'.