நான்கு வயது பெண் குழந்தைக்குத் தாயாக சாய் பல்லவி நடித்துள்ள படம் 'கரு'. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உரு வாகி உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட் டதால் சாய் பல்லவியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடந்தனர். இந்நிலையில் சில காரணங் களால் பட வெளியீடு தள்ளிப் போயுள்ளது. இத்தகவலை அறிந்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். அநேகமாக பிப்ரவரி 23ஆம் தேதி 'கரு' வெளியாகக்கூடும்.
இந்தப் படம் ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை மையப்படுத்தி உருவாகி உள்ளது. சாய் பல்லவியின் இயல்பான நடிப்பு படத்துக்கு உயிர் கொடுத்துள்ளது என்று படக்குழுவினர் பாராட் டுகின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

