மீனாட்சியைக் கவர்ந்த கிராமப் பெண்கள்

1 mins read
d13ddbf5-21a8-456a-a6d8-b497b58a6bbf
-

முத்தையா இயக்கத்தில், சண்முக பாண்டியன், மீனாட்சி ஜோடி சேர்ந்துள்ள படம் 'மதுரவீரன்'. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கிராமப்புறங்களில் நடைபெற்று உள்ளது. தமிழகத்தின் பசுமையான கிராமங்கள் நாயகி மீனாட்சியை வெகுவாகக் கவர்ந்துவிட்டனவாம். "என்னை அழகாக்கி, நிறைய கற்றுத் தந்துள்ளன தமிழக கிராமங்கள். கிராமப் பெண்கள் சேலை அணிவதில் ஆரம்பித்து பலவற்றைக் கற்றுத் தந்தனர். அப்பெண்கள் சேலை அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பில் அவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்," என்கிறார் மீனாட்சி.