நடிகை டாப்சி தனது தற்காப்புக் கலை மையத்தை இந்தியா முழு வதும் விரிவுபடுத்த முயற்சி எடுத்து வருகிறார். அண்மைக்காலமாக அழுத்த மான கதாபாத்திரங்களில் நடித்து வரும் டாப்சி, பெண்களின் பாது காப்புக் குறித்தும் அவ்வப்போது கருத்துக் கூறி வருகிறார். அதோடு பெண்களுக்குத் தற் காப்புக் கலைப் பயிற்சி கொடுத்து அவர்களுக்குத் தன்னம்பிக்கை யையும் தைரியத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்கிற முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
அதன் காரணமாக, ஏற் கெனவே சில தற்காப்புக் கலை மையங்கள் திறந்துள்ள டாப்சி, தற்போது நாடெங்கிலும் அது போன்ற மையங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

